ரஜினி, கமலின் படங்களை இயக்கும் சங்கர்!

சென்னை:அரசியலில் நுழையுமுன் தங்கள் கடைசிப்படங்களை தர ரஜினி, கமல் தயாராகி வருகின்றனர்.
அவர்கள் இருவரது படத்தின் இரண்டாவது பாகங்களையும் சங்கரே இயக்குகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படம் அமோகவெற்றி பெற்றது.
அப்படத்தின் இரண்டாவது பாகம் 2பாயிண்ட் சீரோ என தயாராகி வருகிறது.
இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட தயாராக இருந்தனர்.

பாகுபலி2 படத்தின் பிரமாண்டங்களை விடவும் அதிசயிக்கத்தக்க வகையில் கூடுதல் தொழில்நுட்பத்துடன் காட்சிகள் சேர்க்கவிரும்பி படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
இப்படத்தின் டீசர் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தயாராகி வருவதாக இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கமலஹாசன் நடித்து பிரபலமான இந்தியன் படத்தின் 2வது பாகம் தயாராகிறது. இப்படத்தில் சூர்யா நடிப்பார் என்று தகவல் வெளியானது. தற்போது கமலஹாசன் நடிக்க உள்ளார்.

https://twitter.com/shankarshanmugh/status/956897699126591488
படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும். டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது தைவானில் உள்ள இயக்குநர் சங்கர், இந்தியன்2 பட அறிவிப்பு தொடர்பாக பலூன் ஒன்றை பறக்கவிட்டு அக்காட்சியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here