எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் தலைசிக்கி வாலிபர் பலி!

மும்பை: அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் தலை சிக்கி பரிதாபமாக வாலிபர் உயிரிழந்தார்.

மும்பையை சேர்ந்த வாலிபர் ராஜேஷ்மரு(32). இவரது உறவினர் நாயர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் முடிவெடுத்தனர்.சனிக்கிழமை மாலை ஸ்கேன் எடுப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடந்தன.
அப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட உறவினரை பார்க்க ராஜேஷ் வந்தார்.
அவரை நோயாளிக்கு உதவியாக ஆக்சிஜன் சிலிண்டரை தூக்கி வருமாறு ஆஸ்பத்திரி ஊழியர்கள் கூறினர்.

 

ராஜேஷ் மரு சிலிண்டருடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அருகே சென்றார்.
அப்போது அவரது தலை ஸ்கேன் உள்ளே இழுக்கப்பட்டுவிட்டது.
நீண்டநேரம் போராடி அவர் தலையை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வெளியே எடுத்தனர்.
தலையில் பலத்த ரத்தகாயங்களுடன் காணப்பட்ட அவர் சிறிதுநேரத்தில் இறந்தார்.இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர்கள் 3பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர அரசு ராஜேஷ்மரு குடும்பத்துக்கு ரூ.5லட்சம் கருணைத்தொகை வழங்கியுள்ளது.எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ள அறையில் காந்தசக்தி நிறைந்திருக்கும். அந்த அறைக்குள் இரும்பு அல்லது வேறெந்த உலோகமும் கொண்டு செல்லக்கூடாது. கவனக்குறைவாக இரும்பினால் ஆன ஆக்சிஜன் சிலிண்டரை ராஜேஷ்மரு கொண்டுசென்றதால் காந்த சக்தியில் இழுக்கப்பட்டு உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here