உ.பி. கலவரத்தில் இறந்த வாலிபரின் தாய் ஆவேசம்!

உத்தரப்பிரதேசம்: காஸ்கஞ்ச் நகர் கலவரத்தில் உயிரிழந்த வாலிபரின் தாய், விஷமிகள் தன்னையும் சுட்டுக்கொல்லட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

ஜன.26ம் தேதி குடியரசுதின பேரணி காஸ்கஞ்ச் நகரில் நடந்தது. விஹெச்பி, ஏபிவிபி அமைப்பினர் பேரணியாக மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

அவர்கள் மீது கல்வீசப்பட்டது. இதனைத்தொடர்ந்து கலவரம் மூண்டது. அதில் சந்தன்குப்தா(22) உயிரிழந்தார்.

அவர் பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட வற்புறுத்தப்பட்டார். அதற்கு மறுத்து பாரத மாதா வாழ்க என்று கோஷமிட்டார் சந்தன்குப்தா. அவர் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்ததாக தந்தை சுஷில்குப்தா தெரிவித்தார்.
சந்தன்குப்தா பிகாம் படித்துவந்தார். சங்கல்ப் என்ற பெயரில் சமூகசேவை அமைப்பை நடத்திவந்தார்.

இதனைத்தொடர்ந்து நகரில் கலவரம் மூண்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
தங்கள் குடும்பத்தினர் அனைவருமே பாரத மாதா வாழ்க என்று கோஷமிடுவோம். முடிந்தால் அனைவரையும் சுட்டுவீழ்த்துங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ளார் சந்தன்குப்தாவின் தாயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here