கார் விபத்து! நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சீடர்கள் ஓட்டம்!!

பெங்களூர்:நித்யானந்தா ஆசிரமத்துக்கு வந்துகொண்டிருந்த நடிகை ரஞ்சிதாவின் கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து ரஞ்சிதா வேறொரு காரில் பறந்து சென்றுவிட்டார்.

பெங்களூர் நெலமங்களா அருகே சொகுசுகாரில் ரஞ்சிதாவும், நித்யானந்தாவின் சீடர்களும் சனிக்கிழமை வந்துகொண்டிருந்தனர்.

அவர்களது கார் ஒரு மோட்டார்சைக்கிள் மீது மோதியது.  அதில்வந்த நாராயணகவுடா, லட்சுமிகாந்த் ஆகியோர் ரோட்டில் விழுந்துவிட்டனர்.  ரஞ்சிதாவின் கார் நிற்காமல் சென்றுவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர்.
காரில் இருந்தது நித்யானந்தாவின் சீடர்கள் என்று தெரியவந்ததும் மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர்.

ரஞ்சிதாவுடன் வந்த நித்யானந்தாவின் சீடர் ஒருவர் ரஞ்சிதாவை வேறொரு காரில் பத்திரமாக அழைத்துச்சென்றார்.
இச்சம்பவம் குறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here