’ஆப்’ காட்டிய வழியில் சென்று ஏரியில் மூழ்கிய கார்!

அமெரிக்கா: சாலை தெரிவதற்காக பயன்படுத்திய ஆப் காட்டிய வழியில் சென்ற கார் விபத்தை சந்தித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வெர்மண்ட் நகரை சேர்ந்தவர் டாரா கர்டின். நண்பர்கள் 3பேருடன் வாடகை காரில் சென்றுகொண்டிருந்தார்.

கார் டிரைவர் கூகுள் நிறுவனத்தின் வாஸி என்ற ஆப்பை பயன்படுத்தி காரை இயக்கி வந்தார்.

வாஸி ஆப் அமெரிக்காவில் பிரபலமான ஜிபிஎஸ் ஆப் ஆகும். ஒரு நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தால், அதில் சிக்காமல் மாற்று வழிகள் என்னென்ன என்று பயனாளர்களால் புதிய பாதைகளை எடிட் செய்து அதில் அளிக்க முடியும் வசதிகொண்டது.

இதனை பயன்படுத்தி யாரோ ஒருவர் குறும்பு செய்துள்ளார். இதனால் வாஸி ஆப்பை பயன்படுத்தி காரை ஓட்டிக்கொண்டு வந்தவர் ஏரியில் போய் காரை விட்டுவிட்டார்.

4மணி நேர போராட்டத்துக்குப்பின் கார் மீட்கப்பட்டது.   இதுகுறித்து டாரா கர்டின் போலீசில் புகார் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here