முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராகிறார் டிரம்ப்!

வாஷிங்டன்: முஸ்லிம்கள் வருத்தப்படும் வகையில் வெளியிட்டிருந்த தனது கருத்துக்களுக்காக  வருத்தம் தெரிவிக்க தயாராகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.இதுகுறித்து டிவி பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை சேர்ந்த ஐடிவிக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார் டிரம்ப்.
அந்த பேட்டி தொடர்பான விளம்பரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதில் இஸ்லாமியர்கள் வருத்தப்படும் வகையில் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்தமாதம் டுவிட்டரில், பிரிட்டனை சேர்ந்த பிரான்சன் பதிந்த கருத்துக்களை மறுபதிப்பு செய்திருந்தார் அமெரிக்க அதிபர்.

வலதுசாரி சிந்தனைகளும், பயங்கரவாத செயல்களை எதிர்ப்பதுமான அக்கருத்துக்கள் முஸ்லிம் மக்களுக்கு வருத்தம் தந்தன.
டிரம்பின் இச்செயலுக்கு பிரிட்டன்பிரதமர் தெரசாமே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இவ்வாறு மறுமதிப்பு செய்ததில் தவறேதும் இல்லை என்று தெரிவித்திருந்தார் டிரம்ப்.
இந்நிலையில், தற்போது அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஐரோப்பாவின் நண்பன் நான் என்றும், மதத்தின் பெயரில் தீவிரவாத செயல்கள் நடப்பதை எதிர்ப்பதில் முதல் ஆளாக முன்நிற்பேன் என்றும் டிவி பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here