சியோல் மருத்துவமனையில் தீ! 41பேர் பரிதாப பலி!!

சியோல்: தென் கொரியா நாட்டின் மிர்யாங் நகரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 41பேர் இறந்தனர்.

6 மாடி கட்டிடத்தில் மருத்துவமனை மற்றும் ஒரு நர்சிங் ஹோம் இயங்கி வந்தது.
இன்று காலை மருத்துவமனை கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்த எமர்ஜென்சி அறையில் தீ ஏற்பட்டது.  மளமளவென்று கட்டிடம் முழுவதும் தீ பரவியது.

அதில் ஒரு டாக்டர், 2 நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்றுவந்த 41பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 70பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4மணி நேர போராட்டத்துக்குப்பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here