ரூ.49க்கு ஒரு மாதம் முழுவதும் இலவச அழைப்பு! ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!!

மும்பை: ஜியோ போன் வைத்திருப்பவர்களுக்கு ரூ.49க்கான புதிய ரிசார்ஜ் திட்டம் அறிமுகமாகி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ விடுத்துள்ள அறிவிப்பு:69வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ இத்திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் 1ஜிபி வேகத்துடன் 28நாட்களுக்கு வாய்ஸ்கால் பேசமுடியும். மேலும் அளவற்ற டேட்டா இலவசம்.மேலும் இத்திட்டத்தில் ரூ.11, ரூ.21, ரூ.51. ரூ.101 ஆகிய மதிப்பில் ரிசார்ஜ் செய்து கூடுதல் வசதிகளை பெறமுடியும்.
டிஜிட்டல் சுதந்திரத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

இதற்காக மிகக்குறைந்த விலையில் ஜியோ போன் அறிமுகப்படுத்தியுள்ளோம். 2ஜி சேவைக்கான கட்டணத்திலேயே 4ஜி டேட்டா வழங்குகிறோம் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

குடியரசு தின சலுகை திட்டமாக ரூ.98மதிப்புள்ள ரிசார்ஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு 14நாட்கள் இலவச கால், டேட்டா பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here