துபாய் வேலைக்காரருக்கு வீடு பரிசளித்த தம்பதி!

துபாய்:குடியிருந்த வீட்டையே வேலைக்காரருக்கு தானமாக கொடுத்த சம்பவம் துபாயில் நடந்துள்ளது.அயர்லாந்தை சேர்ந்தவர் ஹென்றி. இவரது மனைவி எலைன்ஹொரன். இருவரும் துபாயில் வேலைபார்த்துவந்தனர்.
நகரில் வீடு வாங்கி தங்கியிருந்தனர். 15ஆண்டுகள் துபாயில் வேலைபார்த்துவந்த ஹென்றி தாய்நாடு செல்ல முடிவெடுத்தார். அவர்கள் வீட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பிலிப்பைன்சை சேர்ந்த ரோசி என்பவர் வேலைபார்த்துவந்தார்.
ஹென்றி தம்பதியினர் ரோசியை தங்கள் உடன் பிறந்த சகோதரியாக கவனித்துக்கொள்வது வழக்கம்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோசி தனது வீட்டுக்குச்சென்று வர பயணச்செலவும் ஒருமாதம் விடுமுறையும் கொடுக்கப்படும்.

ரோசி படிக்கவும், டிரைவிங் கற்றுக்கொள்ளவும் ஹென்றி தம்பதியினர் உதவியுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தாய்நாடு திரும்ப திட்டமிட்ட் ஹென்றி தம்பதியினர் துபாயில் சொந்தமாக வாங்கி வசித்துவந்த வீட்டையும் ரோசிக்கு அன்பாக அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here