அபுதாபி விமான நிலையத்தில் சிக்கினார்! குடியரசு தினவிழாவை தவறவிட்ட முதல்வர்!

ஆந்திரா: அபுதாபி விமான நிலையத்தில் பனிமூட்டத்தால் சிக்கிக்கொண்ட ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபுநாயுடு குடியரசு தின கொண்டாட்டத்தை தவறவிட்டார்.

நாடு முழுவதும் 69வது குடியரசு தின கொண்டாட்டம் நடந்து வருகிறது.  ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நரலோகேஷ் ஆகியோ தாவோசில் ந்டைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சென்றனர்.

அங்கிருந்து அபுதாபி வழியாக இருவரும் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தனர். 26ம் தேதி அதிகாலை 4மணிக்கு அவர்கள் விஜயவாடா வர திட்டம் வகுக்கப்பட்டது.

அபுதாபி விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக 4மணிநேரம் விமானம் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் குழுவுடன் விமான நிலையத்தில் தவித்தார் சந்திரபாபு நாயுடு. இதனால் இந்த ஆண்டு குடியரசுதின விழா கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கமுடியாமல் போனது.

ஆந்திராவில் ஏற்கனவே திட்டமிட்டபடி, விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. ஆளுநர் நரசிம்மன் கொடியேற்றினார். முதல்வருக்கு பதிலாக தலைமை செயலாளர் தினேஷ் குமார் நிகழ்ச்சியை நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here