அழகிப்போட்டியில் பங்கேற்றவர் தலையில் தீ! பகீர் படங்கள்!!

அமெரிக்கா: அழகிப்போட்டியில் பங்கேற்ற இளம்பெண் மேடையில் தீ விபத்தில் சிக்கினார்.
மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சல்வடார் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்நகரில் அழகிப்போட்டி நடந்தது. அதில் வித்தியாசமான உடைகள், கிரீடங்கள் அணிந்து பெண்கள் பங்கேற்றனர்.

மலைவாழ் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இப்போட்டி நடைபெற்றது.
அதனால் அம்மக்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான அலங்காரங்களில் அழகிகள் மேடையில் வலம் வந்தனர்.
ஒரு அழகி பஞ்சினால் செய்யப்பட்ட செயற்கை இறகுகளால் ஆன தொப்பி அணிந்து மேடைக்கு வந்தார்.

அந்த தொப்பி மிகப்பெரியதாக இருந்தது. அதனால் மேடையில் இருந்த ஒரு காவலாளி வைத்திருந்த பந்தத்தில் இருந்த தீ அப்பெண் தொப்பியில் பற்றியது.
இது தெரியாமல் அந்த அழகி அன்ன நடை நடந்துவந்தார்.
நடுவராக போட்டியில் பங்கெடுத்த ஒருவர் துரிதமாக செயல்பட்டு மேடையேறினார்.

தீயை அணைத்தார். அவருக்கு உதவியாக பலரும் தீயை அணைத்தனர். அந்த அழகி பத்திரமாக அழைத்துச்செல்லப்பட்டார்.
இதுதொடர்பான விடியோ இணையத்தில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here