புலிகளிடம் சிக்கி உயிர்பிழைத்த வாலிபர்கள்! பகீர் விடியோ!!

மகராஷ்டிரா: வனப்பகுதியில் புலிகளிடம் மாட்டிக்கொண்ட வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர்.

இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உம்ரத் வனப்பகுதியில் புலிகள் வசித்து வருகின்றன.  அம்மலைப்பாதை வழியாக வாகனங்களில் மக்கள் எப்போதாவது சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மலைப்பாதை வழியாக காரில் வெளியூரை சேர்ந்த சிலர் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது காரை வழிமறித்து ஒரு பெண் புலி படுத்துக்கொண்டது. அவர்கள் காரில் இருந்தவாறே புலியை படம்பிடித்து வந்தனர்.

அப்போது அவ்வழியாக இரு வாலிபர்கள் ஸ்கூட்டரில் வந்தனர். ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் புலி அவர்களை நோக்கி சென்றது.

இருவாலிபர்களும் ஸ்கூட்டரை அணைத்துவிட்டு சிலைபோல அதன்மேல் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.  அவர்களை அப்புலி நெருங்கியது. அவர்கள் பின்னால் வேறொரு புலியும் வந்தது.

இரு இளைஞர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்களை புலிகள் முகர்ந்து பார்த்தன.

இதற்கிடையே அந்த இளைஞர்களை காப்பாற்றும் நோக்கில் காரை மெல்ல மெல்ல ஸ்கூட்டர் பக்கத்தில் பயணிகள் செலுத்தினர். கார் நெருங்கி வருவதை கவனித்த புலிகள் வாலிபர்களை விட்டுச்சென்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here