இணையத்தில் பத்மாவத் படம் வெளியானது! படக்குழுவினர் ஷாக்!!

மும்பை:பத்மாவத் இந்தி திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு பத்மாவதி என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்.

அப்படத்தில் வரலாற்றை திரிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அப்படத்தை திரையிட எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் அப்படத்தில் 20க்கும் மேற்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டன. படத்தின் பெயர் பத்மாவத் என மாற்றப்பட்டு இன்று திரைக்கு வந்தது.

இந்நிலையில், படம் முழுவதும் இணையத்திலும் ரிலீசாகி உள்ளது.
சுமார் 3லட்சம் பேர் முகநூல் பக்கத்தில் வெளியான பத்மாவத் படத்தை பார்த்துள்ளனர். சுமார் 20ஆயிரம் பேர் படம் பார்ப்பதற்கான இணைப்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இதனால் படக்குழுவினர் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here