பெண்ணை சரமாரியாக சுட்டுக்கொன்ற கும்பல்!

மீரட்: அறுபது வயதுப்பெண்ணை சரமாரியாக சுட்டுக்கொன்ற கும்பல் குறித்த விடியோ வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது.மீரட்டின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் நிசேதர் கவுர். அறுபது வயதான இவர் வீட்டின் வெளியே கயிற்றுக்கட்டிலில் ஓய்வெடுத்துவந்தார்.
அப்போது முகத்தை கர்ச்சீப்பால் கட்டி மறைத்துக்கொண்டு மூன்றுபேர் வந்தனர்.
அங்கிருந்த வேலைக்காரப்பெண்ணை அப்புறப்படுத்திய அவர்கள் நிசேதர் கவுர் மீது சரமாரியாக சுட்டனர்.

அதில் அவரதுமுகம், நெஞ்சு, கை, கழுத்து ஆகிய பகுதிகளை குண்டுகள் துளைத்தன.
சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
கடந்த ஆண்டு நிசேதர் கவுரின் கணவர் நிலப்பிரச்சனை தொடர்பாக கொலை செய்யப்பட்டார்.அவ்வழக்கில் இரு நாட்களுக்குமுன் நிசேதரின் மகன் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்.
இந்நிலையில், நிசேதர் கொல்லப்பட்டுள்ளார். அவர் உடலில் இருந்து பத்து குண்டுகள் எடுக்கப்பட்டன.
குற்றவாளிகளில் ஒருவர் கைதாகி உள்ளார். மற்ற இருவரை தேடிவருவதாக போலீசார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here