ஐபோன் பாட்டரி ’டமார்’!

பீஜிங்: ஐபோன் பாட்டரியை கடித்து அகற்றமுயன்றபோது திடீரென வெடித்துள்ளது.
இப்பரபரப்பு சம்பவம் பீஜிங் நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் நடந்துள்ளது.

அங்குள்ள ஐபோன் சேவை மையத்தில் தனது பாட்டரியை மாற்ற ஒருவர் சென்றார்.
போனில் இருந்து பாட்டரியை கழற்ற முடியவில்லை. அதனை கடித்து கழற்ற முயன்றார். எதிர்பாராத வகையில் பாட்டரி வெடித்துள்ளது.

இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. அந்த விடியோ வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபோன்களில் உயர்தர லித்தியம் ஐயன் பட்டரி பயன்படுத்தப்படுகிறது.
போலியான பேட்டரிகள் சிறிது வெப்பம் அதிகமானாலும் இதுபோன்ற பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.

சமீபகாலமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஐபோன்களின் பழைய மாடல்களில் பாட்டரிகள் சரிவர இயங்குவதில்லை என்று புகார் எழுந்துவருகிறது.
இதனை தொடர்ந்து ஐபோன் நிறுவனம் பாட்டரி விலையை ரூ.2ஆயிரம் வரை குறைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here