நாளை நமதே! தமிழகம் முழுவதும் கமல் சுற்றுப்பயணம்!!

சென்னை:நடிகர் கமலஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பிப்ரவரி 21ம் தேதி அறிவிக்கிறார்.
முன்னதாக நாளை நமதே என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.தனது ரசிகர்களுடன் கடந்த சிலநாட்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
ரசிகர்களிடம் பேசிய அவர், ரசிகர் மன்றம் 37ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டபோதே தனது அரசியல் பயணம் துவங்கிவிட்டது என்றார்.

நமது கூட்டத்தில் மேலும் பலர் சேரவுள்ளனர். அவர்களுக்கு ரசிகர்மன்ற நிர்வாகிகள் மூத்த சகோதரர்களாக இருந்து வழிகாட்ட வேண்டும்.
நமக்கு விரோதிகளாக இருப்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள்தான் என்றும் அவர் ரசிகர்களிடம் தெரிவித்தார்.

கமலஹாசன் அடுத்தமாதம் 21ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
அன்றைய தினம் ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் கட்சி பெயரையும் அறிவிக்கிறார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here