துறவியாகும் முன்னர் விரும்பியபடி போட்டோ எடுத்த இளம்பெண்!

குஜராத்: ஜெயின் துறவியாகும் முன் இளம்பெண் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன.
குஜராத் காந்திநகரை சேர்ந்தவர் ஷிபாலிகுமாரி(28).

பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் துறவியாக முடிவெடுத்தார். அதற்கு குடும்பத்தினர் முழு சம்மதம் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் வசந்த பஞ்சமி அன்று இவர் துறவறம் தழுவினார்.
ஷிபாலியின் தந்தை 2003ம் ஆண்டு இறந்தார்.

தாய் பூமிகா மற்றும் சகோதரருடன் ஷிபாலி வசித்துவந்தார்.
குடும்பத்தை விட்டு பிரிந்து நிஜாம்பூரில் ஹாஸ்டலில் தங்கி படித்துவந்தார்.
அப்போது ஜெயின் மதத்தில் அவருக்கு ஈடுபாடு அதிகரித்தது.
அதனைத்தொடர்ந்து மதத்துறவியாக அவர் முடிவெடுத்தார்.

துறவியாகும் முன்னர் ஒருவரது அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றி வைக்கப்படும்.
அதன்படி, ஷிபாலி பல வண்ண ஆடைகள் அணிந்தும், காரில் வலம்வந்தும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தற்போது அப்படங்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here