மணல்கோட்டையில் வசிக்கும் ராஜா!

பிரேசில்: குனாபரா கடற்கரைப்பகுதியில் 22 ஆண்டுகளாக மணல்கோட்டையில் வசித்து வருகிறார் ஒரு ராஜா.
பிரேசில் நாட்டில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக தற்போது புகழ்பெற தொடங்கியுள்ளது மணற்கோட்டை.பாராடிஜூகா கடற்கரையில் 22 ஆண்டுகளுக்கு முன் இதனை கட்டிமுடித்து அதிலேயே தங்கியுள்ளார் மேரிகோ மிசேல்மடோலியஸ்(44).
மணல் சிற்பங்கள் உருவாக்குவதில் நிபுணரான இவர் பொழுதுபோக்காக இக்கோட்டையை வடிவமைத்தார். ஓரிருநாள் அதில் தங்கலாமே என்று நினைத்தார்.

கடற்கரையில் கோட்டையில் வசிப்பது மிகவும் பிடித்திருக்கவே அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.
தனது பிழைப்புக்காக பழைய புத்தக கடை ஒன்றையும் தனது கோட்டைவாசலில் இவர் நடத்தி வருகிறார்.
கோட்டையில் இருக்கும் 3அடி அறையில் இவர் தங்கியுள்ளார்.


ஸ்பெயின் நாட்டு கட்டடக்கலை அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மணல்கோட்டை, பராமரிக்க சற்றுக்கடினமான ஒன்றாக இருக்கிறது.
வானிலை மாற்றத்தால் கோட்டையில் விரிசல் ஏற்படுவதை தடுக்க தினமும் தண்ணீர் விட்டு பராமரிக்கவேண்டும்.

இதற்காக தினமும் 5மணிநேரம் வரை செலவுசெய்கிறார்.
கோடைகாலங்களில் வெப்பம் மிகுந்த நாட்களில் மணல்கோட்டையில் தங்குவது கடினமான ஒன்று.


இந்நாட்களில் அருகில் உள்ள தனது நண்பர் வீட்டில் இரவுமட்டும் இவர் தங்குகிறார்.
மணல்கோட்டை அரசர் என்று மேரிகோவை அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
அப்பகுதி சிறுவர்கள் அவருடன் சேர்ந்து கோல்ப், கிரிக்கெட் விளையாண்டு பொழுதுபோக்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here