பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி காலமானார்!

பெங்களூர்: எம்ஜிஆர், சிவாஜிகணேசன், என்.டி.ஆர் உள்ளிட்ட அந்நாள் ஹீரோக்களுடன் நடித்த  பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி(85) காலமானார்.
மேற்குவங்கமாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி. இவர் நடிகை சவுகார் ஜானகியின் சகோதரி ஆவார்.1951ல் நவிதே நவரத்னலு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அன்றைய நட்சத்திரங்களான எம்ஜிஆர், சிவாஜிகணேசனின் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
திரும்பிப்பார், மனிதன், கற்கோட்டை, புதுயுகம் ஆகியவை இவர் நடித்த தமிழ்ப்படங்களில் சில.
தேசிய, தமிழகம், கர்நாடகா, ஆந்திரமாநில அரசுகள் இவருக்கு சிறந்த நடிகை விருது அளித்து கவுரவித்துள்ளன.

லண்டன் அரசகுடும்பத்தினர் கிருஷ்ணகுமாரியின் நடிப்பாற்றலை பாராட்டி விருந்தும் விருதும் கொடுத்துள்ளனர்.
அஜய்மோகன் இவரது கணவர். திருமணத்துக்குப்பின் பெங்களூரில் வசித்துவந்தார்.
உடல்நலம் குன்றியிருந்த இவர் இன்று காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here