செல்பி எடுக்க முயன்றவர் மீது ரயில் மோதல்! பகீர் விடியோ!!

ஹைதராபாத்: ஓடும் ரயில் முன் செல்பி எடுக்கமுயன்ற மாணவர் ரயில்மோதி பலத்த காயமடைந்தார்.
செல்போன்களில் சுய புகைப்படம் எடுக்கும் செல்பி மோகம் இளையோரிடம் அதிகமாக காணப்படுகிறது.

செல்பி படம்பிடிக்க பல துணிச்சலான காரியங்களில் ஈடுபட துணிந்துவிடுகின்றனர்.
இதனால் அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது.
அவ்வாறான ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

Don't take risky selfies man to day morning hyd mmts train accident

Venkatesh Nakkaさんの投稿 2018年1月24日(水)

ஹைதராபாத் பாரத் நகரில் புறநகர் ரயில் நிலையம் உள்ளது. அங்கு சிவா என்ற கல்லூரிமாணவர் வந்தார்.
அவர் ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் ரயில்மோதி தூக்கிவீசப்பட்டார்.

அவருடன் வந்த நண்பர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிவாவின் தலை மற்றும் கைகளில் பலத்த காயமேற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here