செல்போன் விற்பனை ஜியோ முதலிடம்!

டெல்லி:ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய சாதனையாக செல்போன் விற்பனையிலும் முதலிடம் பிடித்துள்ளது.
4ஜி தொலைத்தொடர்பு சேவையில் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது.


அதிக வாடிக்கையாளர்கள் உடைய நெட்வொர்க், அதிக வாடிக்கையாளர்களை குறைந்த காலத்தில் பெற்றது, ரிலையன்ஸ் ஜியோ ஆப் இந்தியாவில் முதைடம், டேட்டா கார்டு விற்பனையில் முதலிடம் ஆகிய சாதனைகளை ஜியோ ஏற்கனவே படைத்துள்ளது.
தற்போது 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடம் பிடித்துவந்த சாம்சங்க் நிறுவனத்தை ஓரங்கட்டியுள்ளது.

ரூ.1500க்கு மொபைல்போன்களை கடந்த 3மாதங்களாக விற்பனை செய்ய தொடங்கிய ஜியோ இதுவரை 12மில்லியன் போன்களை விற்றுள்ளது.


இதனால் ஸ்மார்ட்போன் சந்தையில் 27% ஜியோவின் வசமாகி உள்ளது.
இச்சந்தையில் 17%மட்டுமே சாம்சங்க் வசம் தற்போது உள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ போன் பயன்படுத்த மாதம் ரூ.153 ரிசார்ஜ் செய்தால் போதும்.
இந்தபோன்களுக்கு வழங்கப்பட்டுவந்த 1ஜிபி இலவசம் குடியரசு தினத்தை முன்னிட்டு 1.5ஜிபியாக அதிகரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here