கேப்டன் கோலிக்கு நெருக்கடி!

டெல்லி: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதுதொடர்பாக கேப்டன் விராட்கோலிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இந்தியா, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் 3டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன.
முதல்2 டெஸ்ட்களிலும் இந்தியா தோற்றது. இந்திய வீரர்கள் தங்கள் திறமைகளை தொலைத்து விட்டவர்களைப்போன்று ஆடினர்.இந்திய வீரர்கள் இப்படி ஸ்கூல் பசங்க மாதிரி அவுட்டாவது வேதனை அளிக்கிறது. இதை கடைசி டெஸ்டிலாவது அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த காலங்களை கடந்து வந்துவிட்டோம் என அவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.ஒவ்வொரு அணியிலும் கேப்டன் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட நான்கைந்து வீரர்கள் இருப்பார்கள்.
தற்போதைய இந்திய அணியில் கோலியின் தலையாட்டி பொம்மைகளாகவே வீரர்கள் உள்ளனர். கோலி தனது தலைக்கனத்தை விட்டுவிட்டு, அணி வீரர்களுடன் அமர்ந்து பேசி வெற்றிக்கு வழி தேட வேண்டும் என்று சூடாக தெரிவித்துள்ளார் சேவாக்.
முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளதாவது:
தென் ஆப்ரிக்கா அணி எல்லாமே வேகப்பந்து தாக்குதல் நடத்துகிறது.
இந்திய அணியில் 5 பேட்ஸ்மேன்கள் திட்டம் எடுபடாது.கேப்டன் கோலி கண்டிப்பாக ரகானேவை உள்ளே கொண்டுவர வேண்டும் என்றார்.கோலிக்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், நாளை 25ம் தேதி ஜோகன்ஸ்பர்க் நகரில் இரு அணிகளுக்கும் இடையே இறுதி டெஸ்ட் நடக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here