போலீசை கண்டித்து டிரைவர் தீக்குளிக்க முயற்சி! பரபர விடியோ!!

சென்னை: போலீஸ் கெடுபிடியால் தீக்குளித்த கார் டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை ஓ.எம்.ஆர்.சாலையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு செய்துவந்தனர்.
எஸ்.ஆர்.பி.டூல்ஸ் சிக்னல் அருகே ஒருவர் சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்தார்.
அவரை அருகில் உள்ள சோதனை சாவடிக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர்.

டிரைவர் மணிகண்டன்(22) செல்போனையும் போலீசார் பறித்துள்ளனர்.
இதனால் மனம்நொந்த டிரைவர் மணிகண்டன் காருக்கு திரும்பி தீக்குளிக்க முயன்றார்.

சென்னை தரமணி சாலையில் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்த ஓட்டுனரை போலீசார் தாக்கியதால் அவமானம் தாங்காமல் மனம் வெகுண்டு சாலையில் வைத்தே பொது மக்கள் முன்னால் தீக்குளித்து உள்ளார்.

Tenkasi Voiceさんの投稿 2018年1月24日(水)

அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். 59% தீக்காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

போலீசாரின் அராஜக நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலையில் போக்குவரத்து சிறிதுநேரம் முடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here