டார்வின் கோட்பாடு! அமைச்சர்களுக்குள் சர்ச்சை!!

டெல்லி: டார்வின் தியரி தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ராஜாங்க மந்திரி சத்யபால் சிங், பரிணாமம் தொடர்பாக டார்வின் கோட்பாடு குறித்து சந்தேகம் எழுப்பினார்.


அக்கோட்பாடு அறிவியல் ரீதியில் தவறானது. அதை பாடத்திட்டத்தில் இருந்து மாற்ற வேண்டும், பூமியில் மனிதன் எந்தக்காலத்திலும் மனிதனாகவே இருந்து உள்ளான். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என முன்னோர்கள் யாரும் எங்கும் கூறவில்லை என்றும் கூறினார்.

இந்தக் கருத்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக சமூக ஊடகங்களில் கண்டனங்கள் குவிந்தன.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டார்வின் கொள்கையை கைவிட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து எனது ராஜாங்க மந்திரியிடம் விவாதித்தேன். இப்படிப்பட்ட கருத்துகளை கூறுவதில் இருந்து விலகி இருக்குமாறு அவரைக் கூறினேன். அறிவியலை நாம் நீர்த்துப்போக செய்யக்கூடாது. இதை அவருக்கு அறிவுரையாக கூறி உள்ளேன்.இக்கோட்பாடு குறித்து விவாதிக்க தேசிய கருத்தரங்கு நடத்தும் திட்டமேதும் அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here