நடிகை பாவனா திருமண வரவேற்பில் கலாட்டா! விடியோ!!

திருச்சூர்:திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை பாவனா சக நடிகை ஒருவரை தவிர்க்கும் விடியோ காட்சி வெளியாகி உள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் பாவனா.

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து வந்தார்.இருவரும் நேற்று முன் தினம் திருமணம் செய்துகொண்டனர்.

கேரளமாநிலம் திருச்சூர் திருவம்படி கோவிலில் வைத்து நவீன் பாவனா திருமணம் எளிமையாக நடைபெற்றதுபின்னர் திருச்சூர் லூலூ மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், உறவினர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவரும் புதுமணத்தம்பதியிடம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றுவந்தனர்.மலையாள நடிகை மிருதுளா முரளி, பாவனாவின் முதுகைத்தொட்டு நெருக்கமாக நின்று படமெடுக்க முயன்றார்.

அவரை பாவனா தள்ளிவிட்டார். இருமுறை ஏமாற்றமடைந்த நடிகை மிருதுளா முரளி புதுமணத்தம்பதிகளுடன் படமெடுத்த பின்பே மண்டபத்தை விட்டு புறப்பட்டார்.

சகநடிகை மிருதுளா முரளியை, மணப்பெண் பாவனா தள்ளிவிடும் விடியோ வெளியாகி உள்ளது. தனக்கு சிக்கலை ஏற்படுத்திய நடிகருடன் நெருக்கமாக உள்ள பெண் என்பதால் அந்நடிகையிடம் பாவனா இப்படி நடந்துகொண்டார் என்று கூறப்படுகிறது.

திருமணத்துக்கு முன் நடைபெற்ற பாவனாவின் மருதாணி வைக்கும் நிகழ்ச்சிகளில்  நடிகை மிருதுளா முரளி பங்கேற்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here