பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு! தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்!!

சென்னை: தமிழகத்தில் மீண்டும் தை புரட்சி ஏற்பட்டுள்ளது என கூறுமளவுக்கு பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 20ம்தேதி முதல் பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


பல இடங்களில் பேருந்துகளில் நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சிகள், போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

தமிழகம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடை எதிர்த்து நடந்த போராட்டத்தை போன்று தன்னெழுச்சி போராட்டமாக பஸ் கட்டண எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது.

திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தின் காணொளி

பஸ் கட்டண உயர்வு : திருச்சியில் மாணவர்கள்

பஸ் கட்டண உயர்வு : திருச்சியில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்!

சற்று முன்さんの投稿 2018年1月22日(月)

கோவையில் மாணவர்கள் பஸ் கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

பஸ் கட்டண உயர்வு

”வேடிக்கை பார்க்கும் பெரியோரே வீதிக்கு வாங்க உங்களுக்காகத் தான் கத்துகின்றோம்” பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோவையில் மாணவ மாணவிகள் வீதியில் இறங்கி பேரணி ஆர்ப்பாட்டம்!

சற்று முன்さんの投稿 2018年1月22日(月)

தஞ்சை, சென்னை, திருப்பூர் நகரங்களிலும் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து தன்னெழுச்சி போராட்டங்கள் நடந்தன.
இதற்கிடையே, வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

“பேருந்துக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கட்டணத்தைச் சதவிகித அடிப்படையில் ஏற்றாமல், ஒரேயடியாக இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளனர்.
பொதுமக்கள் நலன் கருதி இதனை இன்று மதியம் 2.30 மணிக்கு அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அம்மனு ஏற்கப்பட்டு தலைமை நீதிபதியால் விசாரிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here