பஸ்கட்டணம் உயர்வு! பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை கருத்து!!

கோவை:மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பஸ் உயர்வு குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஜெயலலிதாவை மறைமுகமாக குற்றம்சாட்டுவதாக கண்டனம் எழுந்துள்ளது.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தெரிவிப்பதற்கும், மன்னிப்பு கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
தாயாக மதிக்கும் ஆண்டாளிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்பதில் என்ன தவறு? என்றார்.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை.
கடந்த ஆறு ஆண்டுகளாக, ஓட்டு வாங்குவதற்காக, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அப்படியென்றால், ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றியிருக்கிறீர்கள்.

தற்போது மீண்டும் வர வாய்ப்பு இல்லையென்றவுடன், ஒட்டுமொத்தமாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுகிறீர்கள். அந்த கட்டணத்தைக் குறையுங்கள். என்றார்.ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பஸ் கட்டணத்தை ஜெயலலிதா உயர்த்தினார். அதன்பின் அவரே முதல்வராக தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here