நடிகை பாவனா திருமண ஆல்பம்!!

திருச்சூர்: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் பாவனா.

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து வந்தார்.

இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் நடிகை கடத்தப்பட்டு சீண்டப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு நடிகர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அந்நடிகரின் முன்னாள் மனைவி பாவனாவுக்கு நெருங்கிய தோழி ஆவார்.

இந்நிலையில், திருமணத்துக்கு அத்தோழியே அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார்.

கேரளமாநிலம் திருச்சூர் திருவம்படி கோவிலில் வைத்து நவீன் பாவனா திருமணம் எளிமையாக நடைபெற்றது.

பின்னர் திருச்சூர் லூலூ மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், உறவினர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here