அரசு பஸ் கட்டணம் உயர்ந்தது! பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது!!

சென்னை: தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜனவரி 20ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் பஸ் கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. 6 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று இன்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சாதாரண பஸ் (10 கி.மீ) கட்டணம் புறநகர் ரூ. 5-ல் இருந்து ரூ.6ஆகிறது.

விரைவு பஸ் கட்டணம் (30 கி.மீ) ரூ.17-ல் இருந்து ரூ.24 ஆகிறது.

அதி சொகுசு, இடைநில்லா பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ் கட்டணம் (புறவழிச்சாலை 30 கி.மீ) ரூ.18-ல் இருந்து ரூ.27 ஆக உயர்வு

அதிநவீன சொகுசு பஸ் கட்டணம் (30 கி.மீ) ரூ. 21-ல் இருந்து ரூ. 33 ஆக உயர்வு.

குளிர்சாதன பஸ் கட்டணம் (30 கி.மீ) ரூ. 27-ல் இருந்து ரூ. 42 ஆக உயர்வு.

வால்வோ பஸ் கட்டணம் (30 கி.மீ) ரூ. 33-ல் இருந்து ரூ.51 ஆக உயர்வு.

சாதாரண பஸ் (6 கி.மீ) – 4 – அடிப்படை கட்டணம் + 20 சதவீதம்.

விரைவு பஸ் (30 கி.மீ) – 20 – அடிப்படை கட்டணம் + 20 சதவீதம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு அடிப்படை பயண கட்டணத்துடன் 20% கூடுதலாக வசூலிக்கப்படும்.

இதேபோன்று, சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

2011ம் ஆண்டுக்குப்பின் தற்போதுதான் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து டீசல், பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.


முக்கிய நகரங்களில் லிட்டருக்கு 20பைசா வரை எரிபொருள் விலை உயர்வு இருக்கும். சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.65.83 என்றும், பெட்ரோல் லிட்டர் விலை ரூ.74.35ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here