நடிகர்கள் கட்சி 2மாதத்துக்கு மேல் நீடிக்காது!

சென்னை: நடிகர்கள் கட்சி 2மாதத்துக்கு மேல் தாக்குப்பிடிக்காது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.


நடிகர்கள் கட்சி தொடங்குவது வேடிக்கையாக உள்ளது.
நடிகர்கள் தொடங்கும் கட்சி, தீபாவளி ரிலீஸ் படம் போலத்தான்.


புதுப்படம் 2மாதம் பரபரப்பாக ஓடிட்டு அப்புறம் பெட்டிக்குள் சுருண்டுவிடும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
தினகரன் முகாமில் உள்ள எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வனும் நடிகர்களின் அரசியல் பணிதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அரசியல் பிரவேசம் பற்றி நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் பேசியதில்லை.
அவரது மறைவுக்குப்பின் திடீரென அவர்கள் இவ்வாறு பேசுவது அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைப்பதுதான்.


இந்த ஆசை வெறும் பகல் கனவாகத்தான் முடியும். இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here