கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த டட்டூ! 15ஆண்டுக்குப் பின் குற்றவாளி கைது!!

பாங்காக்:கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் 14ஆண்டுகளுக்கு பின்னர் கைதானார். அவரை காட்டிக்கொடுத்தது அவர் உடலில் பச்சை குத்தியிருந்த டட்டூ ஓவியம்.


பாங்காக் நகரை சேர்ந்த கலைக்குழுவை சேர்ந்தவர் ஷிகேரு ஷிராய். 74வயதான மூத்த கலைஞரான இவர் நடனக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.
கலை நிகழ்ச்சிக்காக ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்வது வழக்கம்.


கடந்த ஆண்டு தாய்லாந்துக்கு இவர் சென்றிருந்தார். இவரும், இவரது குழுவினரையும் அங்கிருந்த ரசிகர் படமெடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார்.
அதனை பார்த்த ஜப்பான் போலீசார் பாங்காக் வந்தனர். ஷிகேரு ஷிராயை கைது செய்தனர்.


15ஆண்டுகளுக்கு ஜப்பானில் உள்ள கசுகிகோ என்ற பகுதியில் நிழல் உலகத்தினருடன் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அவ்வழக்கில் 7பேர் மீது சந்தேகம் இருந்தது. போலீசார் விசாரணையில் கொலை செய்த நபர் உடலில் பச்சை குத்தியிருந்தார் என்றும் அப்படத்தின் விபரமும் தெரியவந்தது.

முகநூலில் வைரலான படம் போலீசார் சேகரித்திருந்த விபரத்துடன் ஒத்துப்போனது. அதனைத்தொடர்ந்து ஷிராய் கைதானார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here