பாரிசில் சொகுசு மாளிகை! சர்ச்சையில் சிக்கினார் சல்மான்!!

ரியாத்: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் உலகிலேயே அதிகமதிப்புடைய கட்டிடங்களில் ஒன்றை பாரிஸ் நகரில் வாங்கியுள்ளார்.
சவுதி அரேபியாவில் கலாச்சார புரட்சியை உருவாக்குவதில் முன்னணி வகிக்கிறார் முகமதுபின்சல்மான்.


அந்நாட்டில் இருந்து ஊழலை ஒழிக்க இவரது தலைமையில் தனி கவுன்சில் செயல்படுகிறது.
அக்கவுன்சில் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கையால் பலரும் வெளிநாடுகளில் தாங்கள் வாங்கிக்குவித்துள்ள சொத்துக்களே போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சவுதியை விட்டு வெளியேறவும் தயாராகி வருகின்றனர்.


இந்நிலையில், முகமது பின் சல்மான் சொகுசு மாளிகை ஒன்றை பாரிசில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
300மில்லியன் மதிப்பில் 3ஆண்டுகளுக்கு முன் இந்த மாளிகை விலைபோனது. ஆனால், அதனை வாங்கியவர் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
முகமதுபின்சல்மான் அதனை வாங்கியுள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது.


இந்த மாளிகை 620ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள கோட்டை ஆகும். அது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் நடுவே 50000 சதுர அடி பரப்பில் பிரமாண்ட மாளிகை உள்ளது.
அதில் பத்து சொகுசு படுக்கை அறைகள், நீச்சல்குளம், விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன.
இந்த மாளிகையை வாங்க முகமதுபின்சல்மான் முறைகேடாக பணம் செலுத்தியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here