ஒரே நாடு; ஒரே தேர்தல்! பாஜக புது யோசனை!!

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற புதிய கோஷத்தை முன்வைத்துள்ளது பாஜக.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் ஒரேதேசம், ஒரே மொழி, ஒரேவரி, ஒரே சந்தை என்று பன்மைத்தன்மைக்கு முடிவுகட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.


தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பேரவை,மக்களவை தேர்தலை ஒன்றாக நடத்தலாம் என்று பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை கூறியுள்ளார். கடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் ஒரே தேர்தல் குறித்து பிரதமர் 25நிமிடங்கள் பேசியுள்ளார்.


இந்நிலையில், பாஜக எம்பியும், மும்பை ராம்பாவ் அமைப்பின் நிர்வாகியுமான சஹஸ்ரபுத்தே இம்மாதம் 20,21ம் தேதிகளில் மும்பையில் அரசியல் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதில், ஒரேதேசம் ஒரே தேர்தல் என்பது குறித்து கருத்துக்கள் பிரபலங்கள் கருத்துரையாற்றுகின்றனர்.


இக்கருத்தரங்கில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், நிதி ஆயோக் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


தேர்தல் தொடர்பான சீர்திருத்தங்களில் ஆர்வம் காட்டியவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவர் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளர்களுக்கு தேவை என குரல் கொடுத்தார்.
கட்சித்தாவல் தடை சட்டம் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டது.
ஒரே தேர்தல் திட்டம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரித்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here