பிரதமர் மோடி இந்துவே அல்ல! பிரகாஷ்ராஜ் அதிரடி!!

டெல்லி: பிரதமர் மோடி ஹிந்துவே அல்ல என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
இந்தியா டுடே பத்திரிகை சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
அதில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்று பேசியதாவது:


செக்சி துர்கா என்றபெயரில் சினிமா வந்தது. அது இந்துத்துவத்தை எதிர்க்கவில்லை. ஆனாலும் அந்த படத்துக்கு எதிர்ப்பு இருந்தது.
எனக்கு போதுமான நிலம் உள்ளது. பணமும் உள்ளது. அரசிடம் நிலம் ஏன் நான் வாங்கவேண்டும். நான் மோடிக்கு எதிரானவன். மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெகடேவுக்கும், அமித்ஷாவுக்கும் பிடிக்காதவன். என்னைப்பொறுத்தவரையில் அவர்கள் இந்துக்களே அல்ல.


கொலைக்கு ஆதரவாக இருப்பவர்கள் இந்துவாக இருக்கமுடியாது. கொல் என்று சொல்லுபவர் இந்து இல்லை.
எனது நண்பர் கவுரிலங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சிலர் கொண்டாடினர்.
யார் கொலை செய்தார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் ஒரு கொலையை கொண்டாடுவது சமூக உரிமைக்கு முரணானது. ஆனால், பிரதமர் அவர்களை பின்பற்றுபவர்களாக உள்ளார். இக்கொண்டாட்டம் குறித்து மவுனமாக உள்ளார். ஆனால், அவரது மவுனம் பேசுகிறது.

அவர் ஏன் கொண்டாடக்கூடாது என்று சொல்லக்கூடாது? அவர் அப்படிக்கூறினால் மதச்சார்பற்ற தேசத்தில் இருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு வருமல்லவா?
ஒரு உண்மையான இந்து இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க மாட்டார்.


நான் அவருக்கு வாக்களித்தேனா இல்லையா என்பதில்லை விஷயம். அவர் எனக்கும் பிரதமர். அவரிடம் கேள்விகேட்க எனக்கு உரிமைஉள்ளது.


தனது அமைச்சரவையில் உள்ள ஒருவர் மத துவேஷமுள்ள கருத்துக்களை கூறக்கூடாது என்று கண்டிக்க பிரதமரால் ஏன் முடியவில்லை? எனவே நான் பிரதமரை நேரடியாகவே சொல்கிறேன். நீங்கள் ஒரு இந்துவே அல்ல என்று அதிரடியாக தெரிவித்தார் பிரகாஷ்ராஜ்.                                                                                                                                கருத்தரங்கில் பாஜக பிரமுகர் கிருஷ்ணசாகர், நடிகர் பிரகாஷ்ராஜின் கருத்துக்கு மறுப்பு கூறினார். அவரை நடிகர் மடக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here