பேஸ்புக்கில் ரத்ததான சிறப்பு பகுதி! இளைஞர்களிடம் அமோக வரவேற்பு!!

டெல்லி: பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ரத்ததானம் சிறப்பு பகுதிக்கு இளையோரிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் 60லட்சம் பேர் அச்சிறப்புபகுதியில் இணைந்துள்ளனர்.


இளைஞர்கள் சமூக ஊடகத்தில் பெரும்பான்மையான நேரத்தை பேஸ்புக்கில் செலவழிக்கின்றனர்.
அவர்களிடம் சமூகநலன் குறித்த உணர்வை தூண்ட திட்டமிடப்பட்டது.
இளைஞர்களில் பலர் ரத்ததானம் செய்ய ஆர்வம் கொண்டிருந்தபோதும் உரிய வழிகாட்டல்கள், செய்திகள் கிடைக்காமல்போவதால் அவர்களால் உரிய நேரத்தில் ரத்ததானம் செய்வதில் சிக்கல் இருந்து வந்தது.


இதனைத்தொடர்ந்து பேஸ்புக் ரத்ததானம் செய்வோருக்கான சிறப்பு வசதியை துவக்கியது.
அதுகுறித்து ஹைதராபாத்தில் கருத்தரங்கு ஒன்றையும் நடத்தியது.
ரத்ததானம் குறித்த சிறப்பு பகுதி கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.


அதில் தினந்தோறும் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. பேஸ்புக்குடன் என்.டி.ஆர்.அறக்கட்டளை இணைந்து நாடுமுழுவதும் 250க்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்கள் நடத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here