வைரமுத்துவை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம்! ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் துவக்கினார்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் இன்று உண்ணாவிரதம் துவக்கினார்.

பெண் ஆழ்வாரும், தமிழை ஆண்டவளும், வைணவர்களில் இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கப்படும் ஸ்ரீ ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இன்று காலை தனது மடத்திலேயே உண்ணாவிரத்தைத் துவங்கி விட்டார்.

ஜனவரி 15 ஆம் தேதி வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே ஜீயர்கள், வைணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட ஆர்பாட்டம் நடந்தது.

இதில் பேசிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், ‘’தாயாரைப் பழித்த வைரமுத்து தாயார் சந்நிதிக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் புதன் கிழமை மாலைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்’’ என்று அறிவித்திருந்தார்.

ஆனால் வைரமுத்துவிடம் இருந்து ஏதும் தகவல் இல்லை.

இந்நிலையில் தான் அறிவித்தபடி இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது மடத்திலேயே இன்று காலை முதல் எளிமையாக உண்ணாவிரதத்தில் அமர்ந்துவிட்டார்.

‘’செண்டலங்கார ஜீயர் உள்ளிட்ட பல பெரியவர்கள் உண்ணாவிரதம் வேண்டாம் என்று வற்புறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தான் அறிவித்தபடியே உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்துவிட்டார். அவரை கைவிடச் சொல்லி இன்னும் பல சிஷ்யர்களும் ஜீயர்களும் வற்புறுத்தியபடி இருக்கிறார்கள்’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here