அரச குடும்பத்தின் வாரிசை மீட்க தயாராகிறது கத்தார்!

தோகா: கத்தார் அரசகுடும்பத்தை சேர்ந்த ஷேகப்துல்லா பின் அலி அல் தனியை மீட்க கத்தார் அரசு நடவடிக்கை துவங்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கத்தார் வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டது.
கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த அமீரகம், சவுதிஅரேபியா, பஹ்ரைன், எகிப்து நாடுகள் இம்முடிவை அறிவித்தன. கத்தாருடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டன.


தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் உதவுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
கத்தாருடன் உறவை புதுப்பிக்க 16நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன்வையுங்கள் என்று கத்தார் அரசர் கண்டிப்பு காட்டினார். ஆனால், உரிய ஆதாரங்கள் இல்லாததால் கத்தார் அரசகுடும்பத்தில் குழப்பம் விளைவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


கத்தார் அரசகுடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து சவுதிஅரேபியாவில் வசித்து வருகிறார் ஷேக் அப்துல்லா பின் அலி அல்.
அவரை கத்தார் அரசராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷேக் அப்துல்லா பின் அலி அல் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார்.
அதில் அபுதாபியில் தான் உள்ளதாக தெரிவித்தார். விருந்தினராக வந்து சிறை வைக்கப்பட்டதுபோல் உள்ளதாக கூறினார்.


மேலும், தனது உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு கத்தார் பொறுப்பேதுமில்லை என்றும் தெரிவித்திருந்தார். தனது நிலைமைக்கு ஷேக் முகமதுவே காரணம் என்றும் கூறியிருந்தார்.
இதனால் யாரின் கைப்பாவையாக அவர் இருந்தார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.


இதற்கிடையே, தற்போது குவைத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் ஷேக் அப்துலா சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை மீட்கக்கோரி கத்தார் மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகளை கத்தார் அரசு உலகநாடுகள் உதவியுடன் மேற்கொள்ளும் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here