தினமும் வளரும் 7 இஞ்ச் குழந்தை!

அமெரிக்கா: அரைக்கிலோவுக்கும் குறைவான எடையுள்ள குழந்தையை பெற்று உறுதியான மனத்துடன் வளர்த்து வருகிறார் ஒரு இளம்தாய்.
அமெரிக்காவின் விர்ஜினியா நகரில் வசித்து வருபவர் கிறிஸ்டினா(27). இவரது கணவர் மார்க்கஸ். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது.


கிறிஸ்டினாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு நவம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று கணித்திருந்தனர்.
ஆனால், குறைப்பிரவசமாக 4மாதம் முன்னதாகவே அவருக்கு பிரசவ வலி எடுத்துவிட்டது.
டாக்டர்கள் அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளது என்றும், குழந்தை பிழைப்பது கடினம் என்றும் தெரிவித்தனர்.
கிறிஸ்டினாவும் அவர் கணவர் மார்க்கசும் எப்படியும் எங்கள் முதல் குழந்தையை பிழைக்க வையுங்கள் என்று டாக்டர்களிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
டாக்டர்கள் அதற்கு தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர்.
7 இஞ்ச் நீளமும், 470கிராம் எடையில் ஆண் குழந்தை கிறிஸ்டினாவுக்கு பிறந்தது.
டாக்டர்கள் அக்குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தனர்.


அக்குழந்தையின் உள் உறுப்புகள் அனைத்துமே போதிய வளர்ச்சி அடையவில்லை. எனவே, தொடர்ந்து ஊசிமருந்து மூலமாக உணவும், மருந்துகளும் செலுத்தப்பட்டன.
குழந்தை படிப்படியாக தேறியது. சுமார் 3மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருந்தபின் குழந்தையுடன் கிறிஸ்டினாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர் டாக்டர்கள்.


தற்போது அக்குட்டிக்குழந்தை உடல் எடை ஒன்றரை கிலோவாக அதிகரித்துள்ளது. அதற்காகவே செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பையில் அக்குழந்தை வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
எங்கள் குழந்தை தினமும் வளர்ந்து வருகிறான் என்று சந்தோஷமாக கூறிகின்றனர் கிறிஸ்டினா-மார்க்கஸ் தம்பதியினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here