தேர்தலுக்கு தயாராகும் ரஜினி, கமல்!

சென்னை: அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர்கள், கமல், ரஜினிகாந்த் இருவரும் சட்டப்பேரவை தேர்தல் எப்போதுவந்தாலும் சந்திக்க தயாராகின்றனர்.
தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களாக விளங்கிய ஜெயலலிதா மறைந்தார். கருணாநிதி மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.


இந்நிலையில், திரைத்துறையில் பிரபலமாக விளங்கும் ரஜினியும், கமலும் அரசியலில் குதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவக்குகிறார். முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

                             இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன்.

தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.
இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.

குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும்.
நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம்.                          கரம் கோர்த்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு கமல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ரஜினிமன்றத்திலும், நேரடியாகவும் தனது புதிய கட்சிக்கு உறுப்பினர்களை திரட்டும் பணியில் தீவிரம் காட்டிவருகிறார் ரஜினிகாந்த்.


இன்று அவரளித்த பேட்டியில், கமலின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவது குறித்து காலம்தான் பதில்சொல்லவேண்டும் என்றார்.
சட்டமன்றத்துக்கு ஆறு மாதத்தில் தேர்தல்வந்தாலும் சந்திக்க தயார் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here