ஜெயலலிதா மரண அறிவிப்பு தாமதம்! திவாகரன் கூறிய கழுகு யார்?

மன்னார்குடி: ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா இறந்தது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தன. இதுதொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ம் தேதி இறந்ததாக திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

2016 – டிசம்பர் 4-ந்தேதி மாலை 5-15 மணிக்கே மாரடைப்பால் ஜெயலலிதா இறந்து விட்டார்.
4 ந்தேதி இரவே நான் அங்கு சென்றேன்.


ஜெயலலிதா மரணத்தை ஏன் அறிவிக்க வில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது. அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் எங்கள் மருத்துவமனையின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளது எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என கேட்டார்.

மருத்துவமனையின் பாதுகாப்புக்காக ஒரு நாள் தாமதமாக ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்டது என தினகரன் தெரிவித்தார்.


மேலும் அன்றைய தினம் மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
அவர் கழுகு என கூறியவர்  தற்போது மதிப்புமிகு பதவியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here