டெல்லியில் படித்துவந்த திருப்பூர் டாக்டர் மர்ம கொலை?

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த டாக்டர்  டெல்லியில் மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர் செல்வமணி.
இவரின் மூத்த மகன் சரத்பிரபு. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 முடித்தபின் மெரிட் அடிப்படையில் கோவை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தார்.


கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்கான கோச்சிங் படித்தார். டெல்லி யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் எம்.டி படிப்பில் இடம் கிடைத்து அங்கு படித்து வருகிறார்.

கல்லூரி அருகேயுள்ள அடுக்குமாடி பகுதியில் தமிழகத்தை சேர்ந்த மேலும் 2நண்பர்களுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
இன்று காலை கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தைக்கு உடன் தங்கியிருந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் உடலை கைப்பற்றினர். மருத்துவ பரிசோதனையில் அவர் உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே சரத்பிரபு தலையில் காயம் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்துவந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன், விஷ ஊசி செலுத்தப்பட்டு இறந்துள்ளார்.

அவர் உடல் அருகிலும் பொட்டாசியம் குளோரைடு மருந்து கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தின் அகமதாபாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்துவரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர், சாதி அடிப்படையில் பேராசிரியர்கள் அளித்த தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொள்ள முயன்று சிகிச்சைபெற்றுவருகிறார்.

சரத்பிரபு கொலை தொடர்பாக அரசியல் பிரமுகர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

 

https://twitter.com/PattaliTweets/status/953545317240090625

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here