பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி!

கர்நாடகா: பாஜகவை தொடர்ந்து விமர்சித்துவருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
எனவே, அவர் பங்கேற்றுபேசிய மேடையை பசுவின் சிறுநீர் கொண்டு சுத்தப்படுத்தியுள்ளனர் பாஜகவினர்.

 

https://twitter.com/prakashraaj/status/948012736717275141

சிர்சி நகரில் உள்ள ராகவேந்திர மடத்தில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அப்போது, உத்தர கன்னடா பகுதியைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற விழா மேடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை, பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் பாஜகவினர் சுத்தப்படுத்தினர்.
சிர்சி நகரப் பா.ஜ.க. இளைஞர் அணித் தலைவர், விஷால் மராதே தலைமையில், மேடை உள்ளிட்ட பகுதிகள், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.

இது குறித்து பேசிய விஷால் மராதே, “தங்களை அறிவாளிகள் எனக் கருதும் சிலர், எங்கள் வழிபாட்டுத் தலங்களை அசுத்தம் செய்கின்றனர்.
இவர்களின் வருகையால், ஒட்டுமொத்த சிர்சி நகரமே அசுத்தமாகி விட்டது. ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் இவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடுவதை அங்கீகரிக்கின்றனர்
இத்தகைய, சமூக விரோதிகளைச் சமுதாயம் மன்னிக்காது” என்றார்.

இதற்கு பதிலடி தந்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ், தான் பேசும் அனைத்து மேடைகளையும் இதுபோல் சுத்தம் செய்யுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here