தலைமை நீதிபதிக்கு எதிராக 4நீதிபதிகள் போர்க்கொடி ஏன்?

டெல்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடவடிக்கைகளை எதிர்த்து 4 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

வழக்குகளை பிறபெஞ்சுகளுக்கு ஒதுக்குவது, விசாரணை அமர்வுகளில் நீதிபதிகள் நியமனம், நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு ஆகியவை தொடர்பாக 4 நீதிபதிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை நேரில் உச்சநீதிமன்ற நீதிபதியை சந்தித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். அவ்விஷயங்களை சரிசெய்ய வலியுறுத்தினர்.

ஆனால், அது குறித்து எந்த ஒரு முடிவையும் தலைமை நீதிபதியிடம் இருந்து பெறமுடியவில்லை.

எனவே, பத்திரிகையாளர்களை நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன்கோகாய், மதன்லோகூர், குரியன் ஜோசப்  ஆகியோர் சந்தித்தனர்.

தலைமை நீதிபதியை தாங்கள் சந்தித்த விபரத்தை தெரிவித்த அவர்கள் அவரிடம் அளித்த மனுவின் நகலை வழங்கினர்.

நூற்றாண்டுப்பாரம்பரியம் உள்ள இந்திய நீதித்துறை வரலாற்றில் பாரபட்சமின்றி வழக்குகள் ஒதுக்கப்பட வேண்டும்.

வழக்குகளுக்கு விசாரணை அமர்வுகளை ஏற்படுத்துவது போன்ற கூடுதல் பணிகளை தவிர  தலைமை நீதிபதி அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் சமமானவர்தான்.

தலைமை நீதிபதி தனது பொறுப்பு, கடமை ஆகியவற்றை உணர்ந்து பிற நீதிபதிகளுடன் இப்பிரச்சனைக்கு தீர்வுகாண ஆலோசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டை பாதுகாக்க முடியாவிட்டால், நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. இதனால், கோர்ட் நலன் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.                                                            தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்வது குறித்து நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.  இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

சுதந்திர இந்தியாவில் தலைமை நீதிபதியை சக நீதிபதிகள் அதிருப்திகொண்டிருப்பதாக தெரிவித்தது இதுவே முதன்முறை.

இதனைத்தொடர்ந்து  பிரதமர் நரேந்திரமோடி நீதித்துறை அமைச்சர், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here