ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள்கள்! இந்தியா புதிய சாதனை!!

ஸ்ரீஹரிகோட்டா: ஒரேகல்லில் ஒன்பது மாங்காய் என்பது போன்று ஒரே ராக்கெட்டில் 31செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது இந்தியா.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் பொறுப்பேற்றுள்ளார்.

 

அவர் தலைமையில் ஏவப்படும் முதல் ராக்கெட் இதுவாகும். பி.எஸ்.எல்.வி சி40 ராக்கெட்டில்
புவி ஆய்வு செயற்கைக்கோளான கார்டோசாட்2 மற்றும் 30 செயற்கைக்கோள்கள் இணைக்கப்பட்டன.
கார்டோசாட்2 இந்தியா தயாரித்த 100வது செயற்கைக்கோள்.


இது புவியியல் வளங்கள், தகவல்கள் ஆகியவற்றை படமாகவும், தகவலாகவும் தொகுத்து தரும் திறனுடையது.
இத்துடன் இந்தியாவை சேர்ந்த மேலும் 3செயற்கைக்கோள்களும், அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்களும் சேர்ந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தன.


காலை, 9:28 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்வெளியில் விடப்பட்டன.
அக்கோள்கள் தங்களது நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணம் துவக்கி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here