ஆதார் இணையதளத்துக்கு ஆபத்து அதிகமாம்!

மெல்போர்ன்: ஆதார் இணையதளத்தின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் உள்ளது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தகவல் பாதுகாப்பு அமைப்பான “டிராய் ஹன்ட்” இதுதொடர்பாக எச்சரித்துள்ளது.
இந்தியாவின் ஆதார் முறை உண்மையில் பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை.


யார் வேண்டுமானாலும் அதில் உள்ள தகவல்களை இயக்கும் வகையிலேயே அதன் பாதுகாப்பு உள்ளது. அதனை மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஹேக்கர்கள் இத்தகைய குறைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஆதார் இணையதள சர்வரில் உள்ள தகவல்களை திருடுபோக வாய்ப்புண்டு.


ஆதார் இணையதள தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு டிராய் ஹண்ட் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆதார் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ஒருவரது ஆதார் எண்ணை மட்டும் வைத்து, யாரும் ஏமாற்ற முடியாது.
கைவிரல் ரேகைப் பதிவு, கண்விழிப் பதிவுகள் மூலமே, சேவைகளைப் பெற முடியும். இந்தப் பதிவுகளை திருத்தவோ, திருடவோ முடியாது.

                                                                                                                                                                                                                                குறைதீர்வு அமைப்புகள், மாநில அரசு அதிகாரிகளுக்கு, ஆதார் எண்களை தேடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களும் தங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிட்ட பிறகே, இந்த தகவல்களை பார்க்க முடியும்.
எனவே, ஆதார் எண் தொடர்பான வீண் பயம் தேவையில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here