பத்திரிகையாளர்களை தலைசுற்ற வைத்த பிரதமர்!

பாங்காக்: நிருபர்கள் திடீரென்று கேள்விகேட்டால் தாய்லாந்து பிரதமருக்கு தலைசுற்றிவிடும்.
2014ல் பின்வாசல் வழியாக அதிகாரக்கட்டில் ஏறிய நாளில் இருந்தே பிரதமர் பிரயுத்சன் ஓசாவுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஏழாம்பொருத்தம்தான்.


ஒருமுறை பத்திரிகையாளர் மீது பழத்தோலை வீசினார்.
மைக்கை சரியாக பிடிக்காத நிருபரை அடிக்க பாய்ந்தார்.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க அவர் நீண்ட நாள் யோசனை செய்தார். தற்போது அதற்கு ஒரு வழி கண்டுபிடித்துள்ளார் பிரதமர் பிரயுத் சன் ஓசா.


பாங்காக்கில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அவர் அருகே அவரைப்போன்ற கட்.அவுட் ஒன்றும் இருந்தது.
சிக்கலான கேள்விகள் நிருபர்கள் தரப்பில் இருந்து எழும்போதெல்லாம், கட். அவுட்டை கைகாட்டி இதற்கு இவர்தான் பதில் சொல்லவேண்டும் என்றார்.


நிருபர்களுக்கு தலைசுற்றியது.  இருந்தாலும் பிரதமரின் சமயோசிதத்தை ரசித்து செய்தியாக்கிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here