மனிதாபிமானமற்ற தற்காலிக அரசு கண்டக்டர் ! இறந்த நண்பர் உடலுடன் தொழிலாளி தவிப்பு!!

பெங்களூர்: தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் 8வது நாளாக தொடர்கிறது.

இதனால் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களைக்கொண்டு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருந்து வெளிமாநில பேருந்துகளும் இவ்வாறு தற்காலிக ஊழியர்களை கொண்டு இயங்கி வருகின்றன.

திருக்கோவிலூரை சேர்ந்த இருவர் பெங்களூரில் கட்டிட தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். ஊர்திரும்ப தமிழக அரசு பஸ்சில் அவர்கள் ஏறினர்.   சூளகிரி அருகே பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு கட்டிடத்தொழிலாளி மாரடைப்பால் இறந்தார்.

 

அது குறித்து அவரது நண்பர் கண்டக்டரிடம் தெரிவித்தார். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது.

இறந்தவரையும், அவரது நண்பரையும் நெடுஞ்சாலையில் பாதிவழியிலேயே இறக்கிவிட்டு பஸ் சென்றது.

இதுகுறித்து தெரியவந்த அப்பகுதி மக்கள் திரண்டுவந்தனர்.                                                                        நடுவீதியில் நண்பர் உடலுடன் தவித்தவரை பார்த்து  அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்தனர். பின்னர் இறந்தவர் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

மனிதாபிமானமற்ற முறையில் கண்டக்டர் நடந்துகொண்டதற்கு மக்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here