போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் வாபஸ்!

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை முதல் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளனர்.

போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
மக்கள் நலனை கருத்தில்கொண்டு பொங்கல் பண்டிகைக்காக 17ம் தேதி வரை பஸ்களை இயக்குவது பற்றி மனசாட்சியுடன் தொழிலாளர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
வேலைநிறுத்தத்தை கைவிட தொழிலாளர்கள் 3 நிபந்தனைகள் விதித்தனர்.

1. அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்றுக் கொள்கிறோம். இதுபற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு உறுதி அளிக்க வேண்டும்.

2. 2.44 மடங்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் கோர்ட்டு நடவடிக்கையை எதிர் கொள்ளத் தயார்.

3. எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு சரியான உறுதி மொழியை தர வேண்டும். என்று தெரிவித்தனர்.

இதனை அரசு ஏற்கவில்லை. இதனால் இழுபறி நீடித்தது.


இதற்கிடையே, அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 காரணி ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வது. 2.57 காரணி ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும்.


போக்குவரத்து தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தின் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை வாபஸ் பெறவேண்டும். போராட்ட காலத்தில் வேலைக்கு வரவில்லை என்று சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது’ என்று தொழிலாளர்கள் தரப்பில் இருந்து சமரச திட்டம் தயாரிக்கப்பட்டது.


மத்தியஸ்தர் நியமனத்தை அரசு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here