சவுதி அரேபியாவில் பெண்கள் சுற்றுலா செல்ல சலுகை!

சவுதி அரேபியா: 25வயதான பெண்களுக்கு தனியாக சுற்றுலா விசா அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான சுதந்திரம் படிப்படியாக அளிக்கப்பட்டு வருகிறது.


சமீபத்தில் பெண்கள் காரோட்ட அனுமதிக்கப்பட்டனர். தற்போது 25 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் தனியாக விசா பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா மதநெறிமுறைகளுக்கு உட்பட்ட சுதந்திர நாடாக திகழ விரும்புகிறது. அந்நாட்டின் விஷன் 2020 திட்டத்தில் பல்வேறு புரட்சிகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அதில் ஒரு பகுதியாக பெண்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த விசாக்கள் வழங்கப்படும்.


30நாட்கள் காலக்கெடு உள்ள இவ்விசாக்களை பயன்படுத்தி பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். முக்கிய சுற்றுலா ஸ்தலங்கள் சென்றுவரலாம். குறுகியகால வேலைகளில் ஈடுபட்டுத்திரும்பவும் இந்த விசாக்கள் உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here