மதரசாக்களில் சமஸ்கிருதம் பாடமாகிறது!

டெஹ்ராடன்: மதரசாக்களில் படித்துவரும் மாணவ மாணவிகள் சமஸ்கிருத மொழியையும் இனிமேல் படிக்க உள்ளனர்.
உத்தர்காண்ட் மாநில மதரசா கல்வி வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் மதரசா பள்ளிக்கூடங்களில் பாடத்திட்டம் மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


உத்தர்காண்ட் மாநில மதரசா பள்ளிகளில் சம்ஸ்கிருதத்தை ஒரு பாடமாக சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குரானுடன் பகவத் கீதையும் படிக்கும் வாய்ப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.


இருப்பினும் பாடத்திட்டத்துக்கு ஏற்ற பாடநூல்கள் தயாரிக்க வேண்டியிருப்பதால் இந்த யோசனையை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு கொண்டுவரப்பட உள்ளது.


மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் என்.சி.ஈஆர்டி வரையறுத்துள்ள பாடத்திட்டத்தில் உள்ள இந்தி, அறிவியல், கணிதம், கம்ப்யூட்டர் அறிவியல், சமூக அறிவியல், மருத்துவக்கல்வி ஆகியவற்றையும் கற்றுத்தர மதரசா கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here